மதுக்கரை:மதுக்கரையை அடுத்த திருமலையம்பாளையம், ஜல்லிமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன், 62, கடந்த, 14ம் தேதி காலை, இவர் தனது சகோதரியை காண டவுன்ஹால் சென்றார்.
மறுநாள் காலை கோவை அரசு மருத்துவமனையிலிருந்து, இவரது மனைவி ஆரம்மாளை தொடர்பு கொண்டு பேசிய ஒருவர், சுப்ரமணியன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அங்கு சென்ற ஆரம்மாளிடம் சுப்ரமணியம், எட்டிமடை பகுதியில் தன்னிடம் இருவர் தகராறு செய்து, பாட்டிலால் தலையில் தாக்கியதாகவும், உடைந்த பாட்டிலால் வலது முழங்கை, வலது கால் ஆகியவற்றில் கிழித்து விட்டு, தப்பியதாகவும் கூறியுள்ளார். இது குறித்து, ஆரம்மாள் புகாரில் க.க.சாவடி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.