கோவை:மாற்றுத்திறனாளிகளுக்காக, தேசிய அளவில் நடந்த, 'டென்பின் பவுலிங்' விளையாட்டு போட்டியில், கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் பதக்கங்கள் வென்று அசத்தினர்.
பாரா டென்பின் பவுலிங் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான 2வது தேசிய பாரா டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப் போட்டி, பெங்களூருவில் நடந்தது.
இப்போட்டியில், தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்ற மூவர், 4 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். தமிழக அணியில் இடம் பெற்ற கன்னியப்பன் ஒரு வெள்ளி, ரமேஷ் ஒரு வெள்ளி மற்றும் முத்தரசி இரண்டு வெண்கலம் என, மொத்தம் நான்கு பதக்கங்கள் வென்றனர்.
வெற்றி பெற்றவர்களை அனைவரும் பாராட்டினர்.