கோவை:ரத்தினம் கல்லுாரியில் நடந்த மாவட்ட அளவிலான செஸ் போட்டியில், மாணவர்கள் தங்களின் திறமையான நகர்வுகளால் அசத்தினர்.
ரத்தினம் கல்வி குழுமம் மற்றும் கிட்ஸ் செஸ் கிளப் சார்பில், மாணவ - மாணவியருக்கு மாவட்ட அளவிலான செஸ் போட்டி, ரத்தினம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
இதில், மாணவ மாணவியருக்கு, 8, 10, 13 மற்றும் 17 ஆகிய வயது பிரிவுகளில், போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர் பிரிவு
எட்டு வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில், வேல் சர்வதேச பள்ளியின் யுவன் ஆகாஷ்;10 வயது பிரிவில், சுகுணா பிப் பள்ளியின் மித்ரன்; 13 வயது பிரிவில், எய்ட் ஸ்குவார்டு அகாடமியின் இறையன்பு; 17 வயது பிரிவில், கேம்போர்டு பள்ளியின் சர்வேந்திரன் ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர்.
மாணவியர் பிரிவு
எட்டு வயது பிரிவில், பி.எஸ்.பி.பி., பள்ளியின் ஸ்ரதா; 10 வயது பிரிவில், டான் பாஸ்கோ பள்ளியின் திவ்யா; 13 வயது பிரிவில்பிரவீன் செஸ் அகாடமியின் காவியா; 17 வயது பிரிவில், எய்ட் ஸ்குவார்டு அகாடமியின் தயாழினி ஆகியோர், முதலிடத்தை பிடித்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.