மதுக்கரை:மதுக்கரை வட்டார குழந்தைகள் நல மைய பணியாளர்கள், உதவியாளர்கள் சார்பில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மதுக்கரை மார்க்கெட் பகுதியிலுள்ள சமுதாய கூடத்தில் நடந்த விழாவில், அனைவரும் இணைந்து பொங்கல் வைத்தனர்.
தொடர்ந்து பணியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு, இசை நாற்காலி, கோலமிடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஸ்ரீநிதி தலைமை வகித்தார். நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.