கோவை:மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில், வெண்கலம் வென்ற கோவையை சேர்ந்த 76 வயது வீரர், தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார்.
கோவை பட்டணம்புதுாரை சேர்ந்தவர் ராஜகோபால், 76. இவர் தடகளப்போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார்.
மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில், 75 வயதுக்கு மேற்பட்டோருக்கான நடை போட்டியில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த மாவட்ட அளவிலான மூத்தோர் தடகளம், 5 கி.மீ., நடைபோட்டியில் முதலிடம் பிடித்து, மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். ஹூசூரில் நடந்த மாநில அளவிலான போட்டியில், மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
இதன் மூலம், வரும் பிப்., 14ம் தேதி கொல்கத்தாவில் நடக்கவுள்ள, தேசிய மூத்தோர் தடகளப்போட்டியில் பங்கேற்க, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.