திருப்பூர், திருவள்ளுவர் தினத்தையொட்டி, திருப்பூரில் கட்டட சூப்பர்வைசர் ஒருவர், தன் வீட்டில்
உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, 1,330 குறள்களை ஒப்புவித்து
பூஜை செய்தார்.
திருப்பூர், வேலம்பாளையம், ஆனந்தா அவென்யூவைச் சேர்ந்தவர் ரங்கராஜன், 62.
இவர் திருவள்ளுவர் தினமான நேற்று, தன் வீட்டில் வைத்துள்ள, 3 அடி உயரமுள்ள வள்ளுவர் சிலைக்கு பூக்களை துாவி, குத்துவிளக்கேற்றி, 1,330 குறள்
களை ஒப்புவித்து பூஜை செய்தார்.
ரங்கராஜன் கூறுகையில், ''திருக்குறள் மீதுள்ள பற்றால், 15 ஆண்டுக்கு முன், 1,330 குறள்
களையும் படித்தேன். பார்க்காமலேயே குறளும், அதற்கு பொருளும் சொல்வேன். திருக்குறளில் வள்ளுவர் கூறியுள்ள அறநெறிகளை தவறாமல் கடைப்பிடிக்கிறேன்,'' என்றார்.