திருப்பூர், 15 வேலம்பாளையம், ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளியின், 28 வது ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு, பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி தலைமை வகித்தார். செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஸ்ருதி வேலுசாமி வரவேற்றார். பள்ளி முதல்வர் மணிமலர் ஆண்டறிக்கை வாசித்தார். ஆதார் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் துணை முதல்வர் பிரியா நன்றி கூறினார்.