மனித உரிமை மீறல் வழக்கில் போலீஸ் அதிகாரிகளுக்கு 'பைன்'

Added : ஜன 16, 2023 | |
Advertisement
கோவை:மனித உரிமை மீறல் வழக்கில், மூன்று போலீஸ் அதிகாரிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கோவை அருகேயுள்ள திருமலையம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர், 2019ல், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பேரூராட்சிக்கு மனு அளித்தார். இதனால், திருமலையம்பாளையம் பேரூராட்சி தற்காலிக ஊழியர் மணிகண்டன், கேள்வி கேட்ட

கோவை:மனித உரிமை மீறல் வழக்கில், மூன்று போலீஸ் அதிகாரிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை அருகேயுள்ள திருமலையம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர், 2019ல், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பேரூராட்சிக்கு மனு அளித்தார்.

இதனால், திருமலையம்பாளையம் பேரூராட்சி தற்காலிக ஊழியர் மணிகண்டன், கேள்வி கேட்ட ரமேஷ்குமார் வீட்டிற்கு சென்று மிரட்டினார். இது தொடர்பாக, மாவட்ட கலெக்டரிடம் ரமேஷ்குமார் புகார் அளித்தார்.

இந்நிலையில், 2019, நவ.,12, நள்ளிரவில் ரமேஷ்குமார், வீட்டில் துாங்கி கொண்டிருந்த போது, அப்போதைய மதுக்கரை இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி, மணிவண்ணன், எஸ்.ஐ., ஆனந்தகுமார் ஆகியோர், விசாரணைக்காக அவரை அழைத்து சென்றனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், சென்னையிலுள்ள, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

விசாரித்த ஆணையம், போலீஸ் அதிகாரிகள் மூன்று பேரும் சேர்ந்து, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. அதன்படி, ரமேஷ்குமாருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X