கலையரங்கம் அமைக்கப்படுமா? பல்லடம் நகராட்சி மக்கள் எதிர்பார்ப்பு

Added : ஜன 16, 2023 | |
Advertisement
பல்லடம்:பல்லடம் நகராட்சியில், கலையரங்கம் கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அரசியல் கட்சிகள், மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், பொதுக்கூட்டங்கள், மாநாடு, கலை நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. பல்லடம் என்.ஜி.ஆர்., ரோடு இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு பிரதான

பல்லடம்:பல்லடம் நகராட்சியில், கலையரங்கம் கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அரசியல் கட்சிகள், மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், பொதுக்கூட்டங்கள், மாநாடு, கலை நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. பல்லடம் என்.ஜி.ஆர்., ரோடு இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு பிரதான இடமாக உள்ளது.

கடைவீதி, தினசரி மார்க்கெட், உழவர் சந்தை, வாரச்சந்தை உள்ளிட்டவை ஒருங்கிணைந்த இடமாக என்.ஜி.ஆர்., ரோடு உள்ளது. சாதாரணமாகவே, இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.

இச்சூழலில், அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள், மாநாடு உள்ளிட்டவற்றால், கூடுதல் வாகன நெரிசல் ஏற்படுவதுடன், வியாபாரிகளின் விற்பனையும் பாதிக்கப்படுகிறது. பெரும்பாலும், மாநகராட்சி, நகராட்சி. பகுதிகளில் நடக்கும் இதுபோன்ற மாநாடு, பொதுக்கூட்டங்கள் நடத்த கலையரங்கம் கட்டப்படுகின்றன. இதனால், யாருக்கும் எந்தவித இடையூறும் ஏற்படுவதில்லை.

ஆனால், பல்லடம் நகராட்சியில் நீண்ட காலமாக என்.ஜி.ஆர்., ரோட்டில்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நகராட்சி பகுதியில் கலையரங்கம் கட்டப்பட வேண்டியது அவசியம்.

இதனால், இடையூறுகள் இன்றி நிகழ்ச்சிகள் நடப்ப துடன், நகராட்சிக்கும் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இது குறித்து நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து பல்லடத்தில் கலையரங்கம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X