ஆன்மிகம்
த்ரிசதி சிறப்பு பூஜை
ஸ்ரீ முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், அலகுமலை. ஸ்ரீசுப்ரமண்ய மூலமந்திர சத்ரு சம்ஹார த்ரிசதி அபிேஷம், அலங்காரம் - மாலை, 5:00 மணி.
குருபூஜை விழா
ஸ்ரீ திருநீலகண்ட நாயனார் குருபூஜை, ஸ்ரீ சித்திவிநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், கரட்டங்காடு, தாராபுரம் ரோடு, திருப்பூர். அபிேஷ ஆராதனை, மகா தீபாராதனை - காலை, 4:00 மணி. சுவாமி திருவீதிஉலா - 6:00 மணி. அடியார்க்கு திருஅமுதுடன் திருவோடு வழங்குதல் - 6:30 மணி. அன்னதானம் - காலை, 7:00 மணி.
பொது n
பொங்கல் திருவிழா
நொய்யல் நதிக்கரை, யுனிவர்சல் தியேட்டர் அருகில், திருப்பூர். மங்கள இசை, நாதஸ்வரம், தவில் - காலை, 6:00 மணி. பொங்கல் வைத்தல் - 6:30 மணி. கொங்கு பண்பாட்டு மையம் குழுவினரின் பெருஞ்சலங்கையாட்டம், வள்ளிக்கும்மி, செந்தமிழ்காவடி ஆட்டம், ஒயிலாட்டம் - 6:45 மணி. பொங்கல் வழிபாடு - 7:20 மணி. விகடகவி கலைக்குழுவினரின் கிராமிய நிகழ்ச்சி - மாலை, 4:30 மணி. நொய்யல் அண்ட் மெட்ரோ ரயில் எனும் தலைப்பில் பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சி - மாலை, 6:00 மணி. ஏற்பாடு: திருப்பூர் மாநகராட்சி, நொய்யல் பண்பாட்டு அமைப்பு, நிட்மா, ஜீவநதி நொய்யல் சங்கம்.
விளையாட்டு விழா
ஸ்ரீ அம்மன் மஹால், அம்மாபாளையம், அவிநாசி. ஏற்பாடு: தமிழர் பண்பாடு கலாச்சாரப் பேரவை அறக்கட்டளை. கும்மி, பெருஞ்சலங்கையாட்டம், பரதம், சிறுவர் கலைநிகழ்ச்சிகள் - காலை, 7:30 மணி முதல்.
l காமராஜர் நகர், அவிநாசி. ஏற்பாடு: காமராஜர் இளைஞர் நற்பணி மன்றம். 'பூப்பறிக்க போறோங்கோ' தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி - மாலை, 4:00 மணி.
n விளையாட்டு n
கிரிக்கெட் போட்டி
டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி, ஒயர்ஸ் கிரிக்கெட் மைதானம், முருகம்பாளையம். திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட். காலை, 8:00 மணி.