கோவை:கோவை, உடையாம்பாளையம், பாரதமாதா நற்பணி அறக்கட்டளை சார்பில், காந்திமாநகரிலுள்ள அரவணைக்கும் அன்பு இல்லத்தில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கவுரிசங்கர் தலைமை தாங்கினார். அன்பு இல்ல முதியவர்களுக்கு, புத்தாடைகள் வழங்கப்பட்டன. மதிய விருந்து பரிமாறப்பட்டது. இதில், அன்பு இல்ல நிர்வாக பங்குதந்தை பிரின்ஸ் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Advertisement