அனுப்பர்பாளையம்:பெருமாநல்லுார் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, பி.என்., ரோடு கணக்கம்பாளையம் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக சந்தேகத்திடமாக வந்த மொபட்டை நிறுத்தி சோதனை செய்தார்.
விசாரணையில், பெருமாநல்லுார் அய்யம்பாளையம் ஊர்க்காடு தோட்டம் பகுதியில் ஈஸ்வரமூர்த்தி என்பவரின் வீட்டில் விற்பனை செய்வதற்காக 225 கிலோ பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
புகையிலை பொருட்கள், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த பாண்டியன் நகரை சேர்ந்த ராம்குமார், 30, பெருமாநல்லுார் குன்னத் துார் ரோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பழனிசாமி, 59, ஆகியோரை கைது செய்தனர்.