தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், மாட்டு பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
மாட்டு பொங்கலையொட்டி, விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்போர், தங்களின் மாடுகளை குளிக்க வைத்து, மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, கால்களுக்கு சலங்கை, புது கயிறு கட்டி, மாடுகளை தங்களின் குழந்தைகளை அலங்கரிப்பது போல, அலங்கரித்து அழகு பார்த்தனர்.
அதனைத்தொடர்ந்து, பட்டி பொங்கல் வைத்து, மாடுகளுக்கு தீபாராதனை செய்து வழிபட்டனர்.
பொங்கல் படைத்து, குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் தங்களின் கைகளால், மாடுகளுக்கு பொங்கலை ஊட்டிவிட்டு வணங்கினர்.