கோவை:உப்பிலிபாளையம் ஜோதி நகரை சேர்ந்த 19 வயது மாணவர், பீளமேடு கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். விமான நிலையம் சாலையில், பேக்கரி முன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த மாணவருக்கும், அதே கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் சீனியர் மாணவர்கள் சேர்ந்து, ஜூனியரை தாக்கினர். காயமுற்ற அவர், பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் பற்றி விசாரித்த போலீசார், ராகுல், ஆகாஷ், பத்ரி, ஆதித் ஆகிய நால்வரை தேடி வருகின்றனர்.
சிறுமி மாயம்: கோவையை சேர்ந்த 14 வயது பள்ளிச்சிறுமி, ஜெராக்ஸ் எடுப்பதற்காக கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்.