வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காத்மாண்டு,-நேபாளத்தில், ஐந்து இந்தியர்கள் உட்பட 72 பேர் விமான விபத்தில் உயிரிழந்த இடத்தில் இருந்து, இரண்டு கறுப்பு பெட்டிகளும் மீட்க-ப்பட்டன.
![]()
|
நம் அண்டை நாடான நேபாளத்தின் காத்மாண்டு நகரில் இருந்து, சுற்றுலா தலமான பொக்காராவுக்கு 68 பயணியர் மற்றும் நான்கு ஊழியர்களுடன், 'யெட்டி ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று முன் தினம் காலை 10:30 மணிக்கு புறப்பட்டது.
விமானம், இங்கு சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில், விமானத்தில் இருந்த 72 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து, விமானத்தின் இரண்டு கறுப்பு பெட்டிகளும் நேற்று மீட்கப்பட்டன. இவற்றில், விமானி அறையில் நடந்த உரையாடல்கள், விமான இயக்கத்தின் தகவல்கள் பதிவாகிஉள்ளன.
விபத்தில் உயிரிழந்தோர் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்கு, காத்மாண்டு திரிபுவன் மருத்துவப் பல்கலையில் இருந்து டாக்டர்கள் குழு விபத்து நடந்த இடத்துக்கு வந்தடைந்துள்ளது.
![]()
|
பரிசோதனை முடிந்தவுடன் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி துவங்கும் என நேபாள அரசு தெரிவித்துஉள்ளது.
இந்த விபத்தில் உயிர் இழந்த அபிஷேக் குஷ்வாகா, பிஷால் சர்மா, அனில்குமார் ராஜ்பர், சோனு ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சயா ஜெய்ஸ்வால் ஆகியோர் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள். இதில் நான்கு பேர் உத்தர பிரதேசத்தின் காஜியாபாதைச் சேர்ந்தவர் கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement