கனடாவில் விபத்து: சீக்கிய மாணவர் பரிதாப பலி

Added : ஜன 17, 2023 | |
Advertisement
டொரான்டோ,-கனடாவில் நிகழ்ந்த கார் விபத்தில், 17 வயது சீக்கிய மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவின் பிரிட்டிஷ் கொலாம்பியா மாகாணத்தில் வசிப்பவர் சரப்ஜித் நானாரா லால். சீக்கியரான இவருக்கு தரேன் லால், 17, என்ற மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.தொடர் விடுமுறையையொட்டி, தரேன் லால்
 கனடாவில் விபத்து: சீக்கிய மாணவர் பரிதாப பலி



டொரான்டோ,-கனடாவில் நிகழ்ந்த கார் விபத்தில், 17 வயது சீக்கிய மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவின் பிரிட்டிஷ் கொலாம்பியா மாகாணத்தில் வசிப்பவர் சரப்ஜித் நானாரா லால். சீக்கியரான இவருக்கு தரேன் லால், 17, என்ற மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

தொடர் விடுமுறையையொட்டி, தரேன் லால் சுற்றுலா செல்ல, தன் வீட்டிலிருந்த காரை எடுத்துச் சென்றுஉள்ளார்.

இந்நிலையில் லாங்க்லே பகுதியில், தரேன் லால் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதற்கிடையே, தன் மகன் வீடு திரும்பாததால் சரப்ஜித் நானாரா லால், போலீசில் புகார் அளித்தார்.

விசாரணை நடத்திய போலீசார், மோசமான வானிலை காரணமாக தரேன் லால் சென்ற கார் விபத்துக்குள்ளானதாகவும், இதில் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X