ஹைதராபாத்,-தெலுங்கானாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரதாப் என்பவரின் மனைவிக்கு, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள வங்கி ஒன்றில் சமீபத்தில் வேலை கிடைத்துஉள்ளது.
இதையடுத்து, அவர் தன் மனைவி, குழந்தை மற்றும் தாயுடன், இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் குடியேறினார்.
இந்நிலையில், அந்த வீட்டில்இருந்து பிரதாபின் உடல் துாக்கில் தொங்கிய நிலையில் நேற்று மீட்கப்பட்டது. அவரது மனைவி, குழந்தை மற்றும் தாய், மூவரும்வெவ்வேறு அறைகளில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
பிரதாபின் மனைவி வேலைக்கு வராததை அடுத்து, வீட்டிற்கு வந்த வங்கி ஊழியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், உடல்களை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இடம் மாறுதல் தொடர்பான பிரச்னையால், இவர்கள்தற்கொலை செய்திருக்கக்கூடும் என கூறியுள்ள போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே, நான்கு பேரின் மரணம் தொடர்பான உண்மை தெரியவரும் என தெரிவித்தனர்.