போலீஸ் செய்திகள்

Added : ஜன 17, 2023 | |
Advertisement
30 லிட்டர் கள் பறிமுதல்; ஒருவர் கைதுபொள்ளாச்சி அருகே புளியம்பட்டியைச்சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜன், 50. இவர், தோட்டத்தில், வைத்து அரசால் தடை செய்யப்பட்ட 'கள்' ளை விற்பனைக்கு வைத்து இருப்பதாக மகாலிங்கபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, அங்கு ஆய்வு செய்த போலீசார், விற்பனைக்கு வைத்து இருந்த, 30 லிட்டர் கள் மற்றும், 550 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து


30 லிட்டர் கள் பறிமுதல்; ஒருவர் கைது



பொள்ளாச்சி அருகே புளியம்பட்டியைச்சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜன், 50. இவர், தோட்டத்தில், வைத்து அரசால் தடை செய்யப்பட்ட 'கள்' ளை விற்பனைக்கு வைத்து இருப்பதாக மகாலிங்கபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு ஆய்வு செய்த போலீசார், விற்பனைக்கு வைத்து இருந்த, 30 லிட்டர் கள் மற்றும், 550 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.


விபத்தில் முதியவர் பலி



பொள்ளாச்சியைச்சேர்ந்த சண்முகசுந்தரம், 57, புளியம்பட்டி ராசக்காபாளையத்தைச்சேர்ந்த பெரியமுத்துசாமி, 78 ஆகியோர், புளியம்பட்டி தனியார் மில் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஆலாம்பாளையத்தைச்சேர்ந்த அலிவன், 43, மொபட்டின் பின்புற டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து, இடதுபுறமாக வந்த சண்முகசுந்தரத்தின் வாகனத்தின் மீது மோதினார். இதில், சண்முகசுந்தரம், பெரியமுத்துசாமி இருவரும் காயமடைந்தனர்.

அதில், பெரியமுத்துசாமி, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். சண்முக சுந்தரம், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


102 மதுபாட்டில்கள் பறிமுதல்மூன்று பேர் கைது



திருவள்ளுவர் தினத்தையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, நெகமம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.

அதில், கரப்பாடி 'டாஸ்மாக்' கடைக்கு பின்புறம் அதிக விலைக்கு மது விற்பனை செய்த, மதுரை மாவட்டத்தைச்சேர்ந்த விக்னேஷ், 27, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 44 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதே போன்று, நெகமம் ரங்கம்புதுார் ரோட்டில், பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியைச்சேர்ந்த ரியாஸ்கான், 33, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தார். அவரை கைது செய்த போலீசார், 18 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

வடசித்துார் - கிணத்துக்கடவு ரோட்டில், டாஸ்மாக் கடை பின்புறம் கூடுதல் விலைக்கு மதுவிற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை ஆலங்குடியை சேர்ந்த வீரமணியை, 27, கைது செய்தனர். அவரிடம் இருந்து, 40 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


பணம் வைத்து சூதாட்டம்ஏழு பேர் கைது



ஆனைமலை இட்டேரியில், பணம் வைத்து சூதாடுவதாக ஆனைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பணம் வைத்து சூதாடிய, ஆனைமலையை சேர்ந்த வெள்ளைசாமி, 36, ராஜ்குமார், 36, சபரீஸ்வரன், 36, பிரபாகரன், 35, மனோஜ்குமார், 27, முரளிதரன், 41, மற்றொரு வெள்ளைச்சாமி, 36 என ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, 3,200 ரூபாய் பணம் மற்றும் 42 சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


ஆனைமலை அருகே 2 பேர் கைது



பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியில், கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்யப்படுகிறதா என ஆனைமலை போலீசார் ரோந்து சென்றனர்.

தனியார் பேப்பர் மில் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட, ஆனைமலை அம்பராம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்துவை, 39, கைது செய்த போலீசார், ஒன்பது மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதே போன்று சேத்துமடை டாப்சிலிப் ரோட்டில், கூடுதல் விலைக்கு மது விற்பனையில் ஈடுபட்ட, சேத்துமடையை சேர்ந்த கார்த்திக்கேயன்,29, என்பவரை கைது செய்த போலீசார், 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X