குளிர்ச்சியான கோள்
சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் ஒன்று யுரேனஸ். சூரியனில் இருந்து ஏழாவது கோளாக உள்ளது. இதை 1781ல் பிரிட்டன் விஞ்ஞானி வில்லியம் ெஹர்ெஷல் கண்டுபிடித்தார். இது சூரிய குடும்பத்தில் விட்டத்தின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கோள். இது மிக குளிர்ச்சியான வளிமண்டலத்தை கொண்டது. இங்கு வெப்பநிலை மைனஸ் 224 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. இது ஒருமுறை சூரியனை சுற்றிவர 84 புவி ஆண்டுகள் ஆகிறது. இதனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஒரே விண்கலம் 'வொயாஜர் 2'. இக்கோளுக்கு 27 துணைக்கோள்கள் உள்ளன
தகவல் சுரங்கம்
ஆயிரம் ஏரிகளின் நாடு
ஐரோப்பிய நாடுகளில் ஒன்று பின்லாந்து. இது 'ஆயிரம் ஏரிகள் அமைந்துள்ள நிலம்' என அழைக்கப்படுகிறது. இங்கு 1.87 லட்சம் ஏரிகள் உள்ளன. பின்லாந்தின் மொத்த பரப்பளவில் 10 சதவீதம் ஏரி, குளம், ஆறு உட்பட தண்ணீர் பரப்பு சூழ்ந்துள்ளது. 78 சதவீதம் வனப்பரப்பு சூழ்ந்துள்ளது. பின்லாந்தின் மக்கள்தொகை 50 லட்சம். இதன்படி தோராயமாக 26 பேருக்கு ஒரு ஏரி உள்ளது. பின்லாந்தில் உள்ள ஏரிகளில் பெரியது 'சாய்மா'.
இதன் பரப்பளவு 4400 சதுர கி.மீ., ஐரோப்பாவில் உள்ள பெரிய நன்னீர் ஏரிகளில் இது நான்காவது இடத்தில் உள்ளது.