கோயம்பேடு, காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு சந்தைக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டதால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
விடுமுறையால், நேற்று கோயம்பேடு சந்தையில் மொத்த வியாபார கடைகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. ஆங்காங்கே சில்லரை விற்பனை கடைகள் மட்டுமே செயல்பட்டன.
இதனால், பொங்கல் பண்டிகையை ஒட்டி ஒரு வாரம் பரபரப்பாக இருந்த கோயம்பேடு சந்தை, நேற்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.