ஜாபர்கான்பேட்டை, சென்னை, ஜாபர்கான்பேட்டை, அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் விஜய், 24. இவரது நண்பர்களான முரளி,32, ராஜேஷ்,20 உள்ளிட்ட மூவர், விஜயிடம் கடனாக பணம் வாங்கி உள்ளனர்.
கடந்த டிச., மாதம் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில், விஜயை நண்பர்கள் மூவரும் கத்தியால் தாக்கி தப்பினர். சம்பவம் குறித்து, எம்.ஜி.ஆர்.., நகர் போலீசார் விசாரித்து, டிச., 17ல் கே.கே., நகரைச் சேர்ந்த முரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின், தலைமறைவாக இருந்த கே.கே.,நகரைச் சேர்ந்த புளிமூட்டை ராஜேஷ் என்பவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், ராஜேஷ் மீது ஏற்கனவே, இரண்டு கொலை முயற்சி உட்பட எட்டு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும் இந்தவழக்கில் தலைமறைவாக உள்ள சசி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.