கொருக்குப்பேட்டை, சென்னை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 26 வயது பெண், நேற்று தன் வீட்டருகே நின்றிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த இருவர், அப்பெண்ணை கிண்டல் செய்துள்ளனர்.
இதை அந்த பெண் தட்டிக் கேட்ட போது, தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். தட்டிக் கேட்ட பெண்ணின் கணவரையும், 'டியூப்லைட்'டை உடைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்த புகாரை விசாரித்த கொருக்குப்பேட்டை போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஏழுமலை, 20, டில்லிபாபு, 24, ஆகியோரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் டில்லிபாபு, பழைய குற்றவாளி. இவர் மீது, கொலை முயற்சி உட்பட எட்டு வழக்குகள் உள்ளன. ஏழுமலை மீது வழிப்பறி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.