சென்னை, இந்திய அரசின் மத்திய பனை பொருட்கள் நிறுவனம், காதி கிராமத் தொழில் வாரியம் சார்பில் மாதவரம் மில்க் காலனியில் உள்ள பயிற்சி நிலையத்தில், தங்க மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வரும் 25ம் தேதி முதல் பிப்., 8ம் தேதி வரையில், மொத்தம் 10 நாட்களுக்கு இந்த பயிற்சி நடக்கிறது.
இந்த பயிற்சியின் இறுதியில், மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சி முடித்தவர்கள் தேசிய, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள், நகை அடகு நிதி நிறுவனங்களிலும், நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம்.
இது குறித்து மேலும் தகவல் பெற 94437 28438 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, காதி கிராமத் தொழில் வாரியம் தெரிவித்துள்ளது.