பாரிமுனை, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 106வது பிறந்த நாளையொட்டி,பொதுமக்களுக்கு ராயபுரம் மனோ, அன்னதானமும், நிதி உதவியும் வழங்கினார்.
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி, அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற இணைச்செயலர் ராயபுரம் ஆர்.மனோ ஏற்பாட்டில், பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, பாரிமுனை, ராஜாஜி சாலையில் நேற்று நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், வடசென்னை தெற்கு மேற்கு மாவட்டச் செயலர் பாலகங்கா ஆகியோர் பங்கேற்று, எம்.ஜி.ஆர்., உருவப் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் பொதுமக்கள் 1,000 பேருக்கு மட்டன் பிரியாணி, நலிந்தோருக்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினர். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.