ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டாபிராம், மஹாத்மா காந்தி சாலையில் அமைந்துள்ள ரவுண்டானா பகுதி, 'பேனர்' வைக்கும் 'ஹாட் ஸ்பாட்' ஆக மாறி வருகிறது.
பட்டாபிராம் சுற்றுவட்டார பகுதியில், அரசியல் பொதுக்கூட்டம், திருமணம், இரங்கல் என எது நடந்தாலும், இங்கு பொதுமக்கள் உட்பட அனைவரும் 'பேனர்' வைக்கின்றனர்.
பட்டாபிராம் காவல் நிலையம் எதிர் அமைந்திருந்தாலும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் சாலையில் செல்வோர் கவனம் திசை திருப்பப்பட்டு, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல் துறையினர், இங்கு 'பேனர்' வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.