கொடுங்கையூர், கொளத்துார், அன்னை சத்யா நகர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 33.
இவர் கொடுங்கையூர், டீச்சர்ஸ் காலனியில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு, நேற்று நடந்து சென்றார்.
அப்போது, குடிபோதையில் வந்த மூவர் இவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இவர் பணம் தர மறுக்கவே, தாக்கி விட்டு, 500 ரூபாயை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து விசாரித்த கொடுங்கையூர் போலீசார், சம்பவத்தில் தொடர்புள்ள வியாசர்பாடி, கக்கன்ஜி காலனியைச் சேர்ந்த ஆகாஷ், 20; வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்த அஜய், 19; கொடுங்கையூர், பொன்னுசாமி நகரைச் சேர்ந்த ராஜேஷ்குமார், 23, ஆகிய மூவரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.