பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம் கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை மீட்ட போலீசார், அவர் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா என, விசாரணை செய்து வருகின்றனர்.
பெரும்பாக்கம் அடுத்துள்ள சித்தாலப்பாக்கம், திருவள்ளுவர் நகர், இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ஆனந்த், 32.
நேற்று முன்தினம், நேசமணி நகர் பகுதியில் உள்ள கிணற்றில் ஆனந்தின் உடல் மிதப்பதாக பெரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது.
ஆனந்தின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், ஆனந்த் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை மேற்கொண்டனர்.
ஆனந்த்துக்கும் அவரது மனைவி கனகாவுக்கும், சில ஆண்டாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது. அவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.