சூலுார்:சூலுார், கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில், ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. விசைத்தறி குடோன்கள் ஏராளமாக உள்ளன.
வெளி மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தாண்டும், வழக்கம் போல், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்றதால், கடந்த இரு நாட்களாக தொழிற்சாலைகள் இயங்காமல் வெறிச்சோடி இருக்கின்றன. அடுத்த இரு நாட்களுக்கு பிறகு, சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் திரும்பி வந்த பிறகுதான் தொழிற்சாலைகள் இயங்கத்துவங்கும், என, உரிமையாளர்கள் கூறினர்.