உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், 126 செவிலியர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
விண்ணப்பங்கள், https://tirupur.nic.in/notice category/recruitement என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.
இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு, 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல் இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, நிர்வாக செயலாளர்/துணை இயக்குனர், சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், 147, பூலுவப்பட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் ரோடு, திருப்பூர், என்ற முகவரிக்கு வரும், 30ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.