விசாகப்பட்டினம், ஆந்திராவில், பொங்கல் விருந்திற்காக வந்த மருமகனுக்கு, 379 வகைஉணவுகளை பரிமாறி அவரது மாமியார் அசத்தியுள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, விசாகப்பட்டினம் மாவட்டத்தின் எலுரு நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பீமாராவ், தன் மகள் குஷ்மாவை, முரளிதர் என்பவருக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தார்.
இந்தாண்டு தலைப்பொங்கல் என்பதால், மகளையும், மருமகனையும் பீமாராவ் விருந்திற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த அவர்களுக்கு தடபுடலாக உணவு வகைகள் பரிமாறப்பட்டன. மொத்தம் 379 வகை உணவுகள் பரிமாறப்பட்டதை பார்த்து, மருமகன் முரளிதர் இன்ப அதிர்ச்சி
அடைந்தார்.
எனினும், பரிமாறப்பட்ட உணவில் 10 சதவீதத்தை மட்டுமே அவரால் சாப்பிட முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்கள், 'வீடியோ'க்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.