ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா வரும், 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிப்.,3ம் தேதி இரவு,1:00 மணிக்கு மயான பூஜையும், 4ம் தேதி காலை சக்தி கும்பஸ்தாபனமும், அன்றுமாலை, மகா பூஜையும் நடக்க உள்ளது.
பிப்., 5ம் தேதி காலை குண்டம் கட்டுதலும், அன்று மாலை சித்திரத்தேர் வடம் பிடித்தலும், இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தலும், 6ம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. வரும், 7ம் தேதி காலை, கொடி இறக்குதல்,மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், இரவு மகா முனி பூஜையும் நடைபெற உள்ளது. 8ம் தேதி அம்மனுக்கு மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜையுடன் திருவிழா நிறைவு பெற உள்ளது.
குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கலந்து கொள்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.