உடுமலை:தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க, உடுமலை கிளை செயற்குழு கூட்டத்தில், வருமான வரி செலுத்துவது குறித்த, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கூட்டத்துக்கு, கிளை தலைவர் நடராசன் தலைமை வகித்தார். உறுப்பினர் அரங்கசாமி வரவேற்றார். கூட்டத்தில், ஆடிட்டர் மதன் பேசுகையில், ''வங்கி சேமிப்பு கணக்கு உள்ளவர்கள், ஓய்வூதியமும், குடும்ப ஓய்வூதியமும், சேர்ந்து பெறுபவர்கள், வீடு, இடம் விற்பனை வாயிலாக வருமானம் உள்ளவர்கள், கண்டிப்பாக வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
80 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆண்டு வருமானம், 5 லட்ச ரூபாய் வரை, வரி செலுத்த வேண்டியதில்லை; அதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டும். 80ஜி விதியின் கீழ் நன்கொடை வழங்கினால், நன்கொடை பெற்றவர்கள், செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்,'' என்றார்.