பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இம்மாதம், 28 மற்றும், 29 தேதிகளில் மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி நடக்கிறது.
கோவை மாவட்ட ஹேண்ட்பால் சங்கம், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் சிறுவர், சிறுமியர் மன்றம் ஆகியன இணைந்து, 15 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
போட்டியில் கலந்து கொள்ளும் கோவை மாவட்ட அணிகள், தங்களது வருகையை இம்மாதம், 26ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ள விரும்பும் அணிகள், கோவை மாவட்ட ஹேண்ட்பால் சங்க செயலாளர் தனக்குமார், செல். 76678 51457 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.