வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
புதுடில்லி: பிரிட்டன் தப்பியோடியுள்ள ஆயுத இடைத்தரகர் சஞ்சய் பண்டாரியை இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டு செல்வதற்கான அனுமதியை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வழங்கியது.
கடந்த காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஆயுத இடை தரகராக இருந்தவர் சஞ்சய் பண்டாரி. இவர் மீது 2002ம் ஆண்டு பண மோசடி, வரி ஏய்ப்பு ஆகிய இரு வழக்குளை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை பதிவு செய்திருந்தது.இதையடுத்து லண்டன் தப்பியோடினார் அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
![]()
|
இது தொடர்பாக 2020ம் ஆண்டு அப்போதைய பிரிட்டன் உள்துறை அமைச்சர் ப்ரீத்தி படேலுக்கு கடிதம் அமலாக்கத்துறை, எழுதியுள்ளது. லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடரப்பட்ட இந்த வழக்கை கடந்தாண்டு நவம்பரில் நீதிபதி மிகைல் ஸ்னோ விசாரணை நடத்தி, சஞ்சய்ப பண்டாரி நாடு கடத்தப்பட வேண்டியவர் தான் என தெரிவித்துள்ளார். அடுத்த விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று பிரி்ட்டன் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன், சஞ்சய் பண்டாரியை இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்கினார்.
Advertisement