பெ.நா.பாளையம்:நேபாளத்தில் நடந்த சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள அக்சரம் பள்ளி மாணவர் வெற்றி பெற்றார்.
நேபாளம், பொக்காரா நகரில் இந்தோ, நேபாள அழைப்பு சர்வதேச ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில், பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையம் அக்சரம் சர்வதேச பள்ளி, ஒன்பதாம் வகுப்பு மாணவன் நரேஷ், சீனியர் பிரிவில் பங்கேற்று, இரண்டாம் இடம் பெற்றார். இவரை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.