காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர்; திருத்தணி ஆகிய கோட்டங்கள் செயல்படுகின்றன.
இக்கோட்டத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் இயங்கும் உதவி மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மின் நுகர்வோர் தங்களின் குறை, நிறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் பதிவு செய்யலாம் என, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் பொறுப்பு அலுலவலர் பிரசாத் தெரிவித்துள்ளார்.