ஊட்டி:நுந்தளா கிராமத்தில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தது.
ஊட்டி அருகே நுந்தளா கிராமத்தில் ஆண்டுதோறும் ஜன., மாதம் ஹெத்தையம்மன் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு திருவிழா நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ஹெத்தையம்மனுக்கு பாரம்பரிய முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின், நடந்த காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பாரம்பரிய உடையணிந்து நடன நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான படுகரின மக்கள் பங்கேற்றனர்.