-ஸ்ரீநகர், : ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், லஷ்கர் - இ - தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீரின் பட்கம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் அருகே நடத்தப்பட்ட வாகனச் சோதனையில், சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த வாகனத்தை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்போது அந்த வாகனத்தில் இருந்தவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களிடமிருந்து ஏ.கே., ரக துப்பாக்கி ஒன்றும், கைத்துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டன. இவர்கள் இருவரும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.
Advertisement