குன்னுார்:குன்னுார்- ஊட்டி இடையே மலை ரயிலில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
ஊட்டி, குன்னுார் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில், பொங்கல் விடுமுறை காரணமாக கடந்த, 5 நாட்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் களை கட்டியது.
குன்னுார்- ஊட்டி இடையே தலா, 4 முறை இயக்கப்படும் மலை ரயிலில், 5 பெட்டிகளிலும் 300க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். லேம்ஸ்ராக், டால்பின் ரோஸ், சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். சிம்ஸ்பூங்கா படகு இல்ல ஏரியில், படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டினர்.