காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த தாமல் கிராமத்தில் ஆண்டு தோறும் காணும் பொங்கல் அன்று, அங்குள்ள மந்தைவெளி மாரி எல்லையம்மன் கோவில் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு அந்த விழா நேற்று மாலையில் நடந்தது. இவ்விழாவில் அப்பகுதி மக்கள் பலர் நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக அலகு குத்தி வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.
மாலை 6: 00 மணிக்கு மந்தைவெளி மாரி எல்லையம்மன் ஊர் நடுவில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
சிலர் தீ சட்டி எடுத்து ஊர்வலமாக சென்றனர். அவர்கள் மண்டபத்தில் எழுந்தருளிய அம்மனை சுற்றி வந்து வழிபட்டனர். இரவு 8:00 மணிக்கு அம்மன் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீதியுலா நடந்தது.