வாலாஜாபாத், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை இணையத்தில், 'அப்டேட்' செய்யவில்லை என, துறை அலுவலர்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 13 வட்டாரங்களில், 633 ஊராட்சிகள் இருந்தன. இவற்றில், எட்டு ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் அடங்கிய உள்ளாட்சி நிர்வாகங்கள், 2020ம் ஆண்டு பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டமாக உருவாக்கப்பட்டு உள்ளது.
இரு மாவட்டங்களும், தனித்தனி மாவட்டங்களாக செயல்படுகின்றன.
இருப்பினும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை இணைய தளத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம் ஒரே மாவட்டமாக உள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை இணைய தளத்தில் செல்லும் போது, மாவட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.
இதில், காஞ்சிபுரம் தேர்வு செய்து உள்ளே செல்லும் போது, ஐந்து ஒன்றியங்கள் தான் காட்ட வேண்டும். இதற்கு பதிலாக, ஏற்கனவே இருந்த 13 ஒன்றியங்களை காட்டுகிறது.
இதை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.