பந்தலுார்;பந்தலுார் அருகே முதுமலை புலிகள் காப்பகம், பென்னை கிராமத்தில் பென்னை அரசு துவக்கப்பள்ளி பள்ளி மேலாண்மை குழு, இரு தனியார் அமைப்புகள் இணைந்து, பொங்கல் நிகழ்ச்சியை நடத்தன. தலைமை ஆசிரியர் முருகேசன் வரவேற்றார்.
கூடலுார் ஆர்.டி.ஓ., முகமது குதுரத்துல்லா தலைமை வகித்து பேசினார். எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் பேசுகையில்,''பழங்குடியின மாணவர்கள் கல்வியை பயின்று முன்னேற்றம் அடைந்தால் உயரிய பதவிகளை அடையலாம்,''என்றார்.
தனியார் அமைப்பின் நிர்வாகிகள் அருணா, பிருந்தா, ஆகியோர் மக்களுக்கு உதவி பொருட்களை வழங்கினர். பழங்குடியின மக்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் நஸ்ரின் நன்றி கூறினார்.