பழைய பொருட்களால் தொற்று நோய் அபாயம்
திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட நெடுஞ்சாலையோரம் பழைய பொருட்கள் கடையில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக், இரும்பு போன்ற கழிவு பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும், சாலையோரம் கிடக்கும் கழிவு பொருட்களில் கால்நடைகள் இரை தேடுகின்றன.
இந்த கழிவு பொருட்களால் ஏற்படும் துார்நாற்றத்தில் இவ்வழியே வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதோடு, தொற்று நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து தகுந்தநடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டி.பால்ராஜ், திருமழிசை.