கூடலுார்:முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி சீகூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட காப்புகாட்டில் சந்தன மரம் வெட்டி கடத்தியது குறித்து வனத்துறைக்கு தகவல் வந்தது.
முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரப்படி, சீகூர் வனச்சரகர் முரளி தலைமையில் தனி குழு அமைத்து விசாரணை நடந்தது.
இது தொடர்பாக, தெங்குமரஹடாவை சேர்ந்த பண்டன், ஆனைகட்டியை சேர்ந்த பாலன், சந்திரன் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். கடத்தப்பட்ட சந்தன மரத்துண்டுகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.