குன்னுார்:ஜெகதளா பேரூராட்சியில், பொது குடிநீர் தொட்டியில் இருந்து பங்களாக்களுக்கு முறைகேடாக குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
பெட்டட்டி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் கூறுகையில்,''ஜெகதளா பேரூராட்சிக்கு எந்த கட்டணமும் செலுத்தாமல், 40 பங்களாக்களுக்கு பேரூராட்சி தொட்டியில் இருந்து ஒன்றரை 'இன்ச் பைப்' மூலம் தனியார் குடிநீர் தொட்டிக்கு முறைகேடாக இணைப்பு வழங்கப்பட்டது.
''சுற்றுலா துறை அமைச்சரின் பெயரை கூறி, முறைகேடு நடந்து வருகிறது. மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பிய பிறகு, அந்த இணைப்பு துண்டித்து, 'ஓஸ் பைப்' மூலம் குடிநீர் எடுக்கப்படுகிறது. இப்பகுதியில் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.