நகரி, ஆந்திர மாநிலம், நகரி அடுத்த, சத்திரவாடா கிராமத்தில், திருவள்ளுவர் நுாலகமும், மணி மண்டபமும் அமைந்துள்ளது.
மணி மண்டபத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, திருவள்ளுவர் தினத்தை ஒட்டி நேற்று முன்தினம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதை தொடர்ந்து, திருவள்ளூர் இளைஞர் சங்கள் சார்பில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பட்டிமன்றமும் நடந்தது.
தமிழை தாய்மொழியாக கொண்டு, ஆந்திர மாநிலத்தில் வசிப்பவர்களால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், நெசவாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.