கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய பகுதியில், போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது டிக்கெட் கவுன்டர் அருகே சந்தேகம் ஏற்படும்படி நின்றுக் கொண்டிருந்த இருவரை விசாரித்தனர்.
முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டனர். அதில், 6 கிலோ கஞ்சா சிக்கியது.
அவர்கள், ஆவடி முரளி, 62, பெரம்பூர் டிக்சன், 41, என்பது தெரியவந்தது.
கஞ்சாவை பறிமுதல்செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் விசாரிக்கின்றனர்.