சபரிமலை, சபரிமலையில் இன்றுடன் நெய்யபிஷேகம் நிறைவு பெறுகிறது. நாளை இரவு மாளிகைப் புறத்தில், குருதி பூஜையுடன் பக்தர்களின் தரிசனமும் நிறைவு பெறும்.
கேரள மாநிலம், சபரிமலையில் ஜன., 14ல் மகரஜோதிக்குப் பின்பும், பக்தர்கள் கோவிலுக்கு வருவது தொடர்கிறது.
தினமும் இரவு மாளிகை புறத்தில் இருந்து அய்யப்பன் எழுந்தருளினார். இன்று சுவாமி சரங்குத்திக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
டிச., 31ல் துவங்கிய நெய்யபிஷேகம் இன்று காலை, 11:00 மணிக்கு நிறைவு பெறும்.
தொடர்ந்து தேவசம்போர்டு சார்பில் சந்தன அபிஷேகம் நடைபெறும். நாளை தரிசனம் உண்டு; அபிஷேகம் கிடையாது.
நாளை இரவு, 10:00 மணிக்கு பின், தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. மாளிகைபுறத்தில், குருதி பூஜை நடைபெறும்.
வரும், 20 அதிகாலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6:30 மணிக்கு அடைக்கப்படும்.
பந்தள மன்னர் குடும்பத்தில், மூதாட்டி ஒருவர் இறந்ததால், கோவில் சாவி ஒப்படைப்பு உள்ளிட்ட சடங்குகள், இந்த ஆண்டு நடைபெறாது.