கோவை:சிங்காநல்லுார், ராமானுஜம் நகரில், ரோட்டோரத்தில் துாங்கி கொண்டிருந்த தொழிலாளி சுரேஷ்,30, என்பவர் மீது, அவருடன் தங்கியிருந்த மற்றொரு தொழிலாளி சுப்பிரமணிடீசல் ஊற்றி, எரித்து கொலை செய்தார்.
இது தொடர்பாக, சிங்காநல்லுார் போலீசார், சுப்பிரமணியை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், சிங்காநல்லுார் காமராஜர் ரோட்டிலுள்ள ஒரு பங்கில் டீசல் வாங்கி சென்று, கொலைக்கு பயன்படுத்தியது தெரிய வந்தது.
பாட்டிலில் பெட்ரோல், டீசல் விற்க பங்கிற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால், அரசு உத்தரவு மீறி, வாட்டர் பாட்டிலில் டீசல் விற்பனை செய்த, பங்க் ஆபரேட்டர் பாஸ்கரன்,62, கேஷியர் பாலகிருஷ்ணன்,59, ஆகியோரை சிங்காநல்லுார் போலீசார் கைது செய்தனர். பின், இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.