கோவை:மகாராஷ்டிராவில் நடந்த தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில், கோவை மாணவியர் பதக்கம் வென்று அசத்தினர்.
சைக்கிளிங் பெடரேஷன் ஆப் இந்தியா மற்றும் மகாராஷ்டிரா சைக்கிளிங் சங்கம் சார்பில், தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டி, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது.
இப்போட்டியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், பல்வேறு வயது பிரிவுகளில் போட்டியிட்டனர்.
இதில், 14 வயது பிரிவு டைம் டிரையல் போட்டியில், கோவையை சேர்ந்த தபிதா தங்கம்; 16 வயது டைம் டிரையல் பிரிவில், கோவையை சேர்ந்த தன்யதா வெள்ளி பதக்கம் வென்றார்.
இதேபோல், குழு டைம் டிரையல் போட்டியில், தன்யதா மற்றும் தபிதா வெண்கலப்பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவியரை, கோவை மாவட்ட சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள் பாராட்டினர்.